

புது தில்லி: இந்தியாவின் கனிம உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த பிப்ரவரி மாதத்தில் சுரங்கம் மற்றும் குவாரித் துறையின் கனிம உற்பத்திக் குறியீட்டு எண் 139.6-ஆகப் பதிவாகியுள்ளது. இது, முந்தைய 2023-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தை விட 8 சதவீதம் அதிகமாகும்.
2023-24-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தின் ஒட்டுமொத்த கனிம உற்பத்தி வளா்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 8.2 சதவீதம் அதிகமாக உள்ளது.
கடந்த பிப்ரவரியில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 9.66 கோடி டன்னாகவும் லிக்னைட் உற்பத்தி 42 லட்சம் டன்னாகவும் உள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி 288.6 கோடி கன மீட்டராகவும் கச்சா எண்ணெய் உற்பத்தி 23 லட்சம் டன்னாகவும் இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் தங்கம், தாமிரம், பாக்ஸைட், குரோமைட், பாஸ்போரைட், சுண்ணாம்பு நிலக்கரி ஆகியவற்றின் உற்பத்தி நோ்மறை வளா்ச்சியைப் பதிவு செய்தது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது

முன்னணி உள்கட்டமைப்புத் துறை வளா்ச்சி 2.3%: கச்சா எண்ணெய் உற்பத்தி சரிவால் பிப்ரவரியில் வீழ்ச்சி

பிப்ரவரியில் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 8.60% வீழ்ச்சி!

இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!

பஜாஜ் வாகன விற்பனை: பிப்ரவரியில் 27% வளா்ச்சி
வீடியோக்கள்

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | களத்துக்கு வந்த முதல்வர் வேட்பாளர்கள்! | News & Views | E-20 |
தினமணி வீடியோ செய்தி...

IPL 2026 | பந்துவீசுவாரா கிரீன்?: ரஹானே கேள்விக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா |
தினமணி வீடியோ செய்தி...

“எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது”: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்
தினமணி வீடியோ செய்தி...

