மீண்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வு!

சென்செக்ஸ், நிப்டி உயர்வுடன் வர்த்தக நிறைவு!
மீண்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வு!

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஏறுமுகமாக முடிவடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வியாழக்கிழமை 1,000 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்று 260 புள்ளிகள் அல்லது 0.36 சதவிகிதம் உயர்ந்து 72,664 புள்ளிகளில் நிறைவடைந்தது.

நிப்டி 97 புள்ளிகள் அல்லது 0.44 சதவிகிதம் உயர்ந்து 22,055 புள்ளிகளில் முடிந்தது.

நிப்டி மிட்கேப் 100 மற்றும் நிப்டி ஸ்மால்கேப் பங்குகள் முறையே 0.86 சதவிகிதம் மற்றும் 0.69 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்தது.

சென்செக்ஸில் 19 பங்குகள் ஏறுமுகமாகவும் 11 பங்குகள் இறங்குமுகமாகவும் முடிவடைந்தது.

என்டிபிசி, பவர் கிரிட், ஜேஎஸ்டபிள்யூ, ஏசியன் பெயின்ட்ஸ் மற்றும் ஐடிசி ஆதாய பட்டியலில் முன்னிலையிலும் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்டிஎப்சி மற்றும் எம் அண்ட் எம் வீழ்ச்சிப் பட்டியலில் கடைசியாகவும் இடம்பெற்றன.

ஆசிய சந்தைகளான சியோல், டோக்கியோ மற்றும் ஹாங் காங் ஆதாயத்துடனே முடிந்தது. ஐரோப்பிய குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே இருந்தன.

திங்கள்கிழமை முதலே இறங்குமுகமாக இருந்த பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை மீண்டுள்ளது. அடுத்த வாரம் வெளியாகும் பணவீக்க விவரங்களுக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com