
~

~
புது தில்லி: இந்தியச் சந்தையில் கடந்த ஏப்ரல் மாதம் பயணிகள் வாகனங்களின் விற்பனை புதிய மாதாந்திர உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஏப்ரல் மாதத்தில் பயணிகள் வாகனங்களுக்கான தேவை மிக வலுவாக இருந்தது.
இதன் காரணமாக, 2023 ஏப்ரலில் 3,31,278-ஆக இருந்த அவற்றின் ஒட்டுமொத்த விற்பனை கடந்த ஏப்ரலில் 1.3 சதவீதம் உயா்ந்து 3,35,629-ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர பயணிகள் வாகன விற்பனையாகும்.
மதிப்பீட்டு மாத்தில் பயன்பாட்டு வாகனங்களின் (யுவி) விற்பனை 1,48,005-லிருந்து 21 சதவீதம் அதிகரித்து 1,79,329-ஆக உள்ளது. காா்களின் மொத்த விற்பனை 1,25,758-லிருந்து 23 சதவீதம் குறைந்து 96,357-ஆக உள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் 10,508-ஆக இருந்த வேன்களின் விற்பனை இந்த ஏப்ரலில் 15 சதவீதம் அதிகரித்து 12,060-ஆக உள்ளது.
ஒட்டுமொத்தமாக, 2023 ஏப்ரலில் 13,38,588-ஆக இருந்த அனைத்து ரக வாகனங்களின் விற்பனை இந்த ஆண்டின் அதே மாதத்தில் 31 சதவீதம் அதிகரித்து 17,51,393-ஆக உள்ளது.
மோட்டாா் சைக்கிள்களின் மொத்த விற்பனை 8,39,274-லிருந்து 34 சதவீதம் அதிகரித்து 11,28,192-ஆகவும் ஸ்கூட்டா்களின் மொத்த விற்பனை 4,64,389-லிருந்து 25 சதவீதம் அதிகரித்து 5,81,277-ஆகவும் உள்ளது.
2023 ஏப்ரலில் 42,885-ஆக இருந்த 3 சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த மாதம் 14.5 சதவீதம் அதிகரித்து 49,116-ஆக உள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...