
முதலீட்டாளர்களுக்கு இந்திய பங்குச் சந்தை மற்றொரு கடினமான நாளாக இன்று நிலவியது.
இன்றைய வர்த்தக அமர்வில் சாதகமான தொடக்கம் இருந்தபோதிலும், சந்தை உயர உயர முதலீட்டாளர்கள் தங்கள் கைவசம் உள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 324.83 புள்ளிகள் அதிகரித்து 79,820.98 ஆக இருந்தது. அதே வேளையில் நிஃப்டி 100.7 புள்ளிகள் உயர்ந்து 24,242 ஆக இருந்தது.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 820.97 புள்ளிகள் குறைந்து, 78,675.18 புள்ளிகளாகவும், நிஃப்டி 257.80 புள்ளிகள் குறைந்து, 23,883.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, என்டிபிசி, மாருதி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் டிரென்ட், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், சன் பார்மா, இன்போசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, ஆக்ஸிஸ் வங்கி, டாடா ஸ்டீல், டைட்டன் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.
ஆட்டோமொபைல், வங்கி, கேப்பிட்டல் குட்ஸ், எஃப்எம்சிஜி, மெட்டல், எண்ணெய் மற்றும் எரிவாயு, பவர், டெலிகாம், மீடியா, பார்மா ஆகிய துறை சார்ந்த குறியீடுகள் 0.5 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் வரை சரிந்தன.
இதையும் படிக்க: வடதமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாகுமா? பாலச்சந்திரன் பதில்!
கோஃபோர்ஜ், ஈக்லெர்க்ஸ் சர்வீசஸ், ஃபெடரல் வங்கி, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஜேஎஸ்டபிள்யூ ஹோல்டிங்ஸ், மாஸ்டெக், நியூலேண்ட் லேப், போகர்னா, சாஸ்கன் டெக்னாலஜிஸ், தைரோகேர் டெக்னாலஜிஸ், யூனிசெம் லேப்ஸ் உள்ளிட்ட 190 பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.
மறுபுறம் ஏசியன் பெயிண்ட்ஸ், பிர்லா கார்ப், ஈக்விடாஸ் வங்கி, ஜிஎன்எஃப்சி, ஜேகே லட்சுமி சிமெண்ட், ரிலாக்ஸோ காலணி, ரெஸ்டாரண்ட் பிராண்ட், ஷாப்பர்ஸ் ஸ்டாப், ஸ்ரீ சிமென்ட்ஸ், டிசிஐ எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பிஎஸ்இ-யில் 52 வார குறைந்த விலையில் வர்த்தகமாகிக் கொண்டிருப்பதையும் கவனிக்க வேண்டும்.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.2,306.88 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,026.63 கோடி பங்குகளை வாங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.