எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

3 நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மூன்று நாள் சரிவுக்குப் பிறகு இன்று மீண்டும் உயர்ந்தது.

News image
பங்குச் சந்தை சென்செக்ஸ்
Updated On :18 அக்டோபர் 2024, 12:29 pm

DIN

மும்பை : பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மூன்று நாள் சரிவுக்குப் பிறகு இன்று மீண்டது.

இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் வங்கி பங்குகள் அதிக அளவு கொள்முதல் செய்ததும், உலகளாவிய ஸ்திரத்தன்மை போக்கும் இதற்கு மேன்மேலும் வழிவகுத்தது.

வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 218.14 புள்ளிகள் உயர்ந்து 81,224.75 புள்ளிகளில் நிலைபெற்றது. காலை நேர வர்த்தகத்தில் 384.54 புள்ளிகள் உயர்ந்து 81,391.15 புள்ளிகளாக இருந்தது. அதே வேளையில் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 104.20 புள்ளிகள் உயர்ந்து 24,854.05 புள்ளிகளாக முடிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் ஐடி மற்றும் எஃப்எம்சிஜி துறைகள் சரிவைக் கண்டன. அதே நேரத்தில் அக்டோபர் 19 ஆம் தேதி ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா ஆகியவற்றின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாம் காலாண்டு முடிவுகளுக்கு முன்னதாக வங்கிப் பங்குகள் 1 சதவிகிதம் வரை உயர்ந்தன.

வாரத்தின் கடைசி நாளான இன்று உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை வாங்கியதால் சந்தை சற்றே மீண்டது.

செப்டம்பர் காலாண்டில் ஆக்சிஸ் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 19.29 சதவிகிதம் உயர்ந்து ரூ.7,401.26 கோடியாக இருந்ததையடுத்து அதன் பங்குகள் 6 சதவிகிதம் உயர்ந்தது.

இன்றை வர்த்தகத்தில் ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், என்டிபிசி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை உயர்ந்து வர்த்தகமானது.

ப்ளூ சிப் பங்குகளான இன்போசிஸ் அதன் இரண்டாவது காலாண்டு வருவாய் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தத் தவறியதால் 4 சதவிகிதத்திற்கும் அதிகமாகவும் சரிந்தது.

ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஐடிசி ஆகிய பங்குகளும் சரிந்து முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இன்று (அக். 18) ரூ.7,421.40 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். இருப்பினும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.4,979.83 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில் டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை உயர்ந்து முடிந்தன. சியோல் சரிந்தும், அமெரிக்க சந்தைகள் நேற்று (அக். 17) உயர்வுடன் முடிந்தது.

உலகளாவிய எண்ணெய் அளவுகோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.07 சதவிகிதம் குறைந்து 74.40 அமெரிக்க டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.