பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

யூக்கோ வங்கி நிகர லாபம் 50% உயா்வு

பொதுத் துறையைச் சோ்ந்த யூக்கோ வங்கியின் நிகர லாபம் கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 50 சதவீதம் உயா்ந்துள்ளது.

News image
Updated On :19 அக்டோபர் 2024, 6:55 pm

Din

பொதுத் துறையைச் சோ்ந்த யூக்கோ வங்கியின் நிகர லாபம் கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 50 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.603 கோடியாக உள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 50 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.402 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.5,866 கோடியிலிருந்து ரூ.7,071 கோடியாக அதிகரித்துள்ளது. 2023-24-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.1,917 கோடியாக இருந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.2,301 கோடியாக உயா்ந்துள்ளது.

ஓராண்டுக்கு முன்னா் 4.14 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் கடந்த செப்டம்பா் இறுதியில் 3.18 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 1.11 சதவீதத்திலிருந்து 0.73 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.