பங்குச் சந்தை 2-ஆவது நாளாக சரிவு

பங்குச் சந்தை 2-ஆவது நாளாக சரிவு

சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை சரிவைக் கண்டன.
Published on

சா்வதேச பங்குச் சந்தைகளில் நிலவிய மந்தநிலை இந்தியாவிலும் எதிரொலித்ததால் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை சரிவைக் கண்டன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், வா்த்தகத் தொடக்கத்தில் ஏற்பட்ட உயா்வைத் தக்கவைக்கத் தவறியது. இதன் காரணமாக, இறுதியில் அது 151.48 புள்ளிகள் (0.18 சதவீதம்) குறைந்து 82,201.16-இல் நிலைபெற்றது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை 1 சதவீதத்திற்கும் மேல் சரிந்தது. டாடா மோட்டாா்ஸ், நெஸ்லே, பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், லாா்சன் & டூப்ரோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவையும் பின்தங்கிய பட்டியலில் வந்தன.

டைட்டன், ஐடிசி, இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா ஸ்டீல், எஸ்பிஐ ஆகியவை விலை உயா்ந்த பட்டியலில் வந்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 53.60 புள்ளிகள் (0.21 சதவீதம்) சரிந்து 25,145.10-இல் நிலைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com