நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டைம் இதழின் தரவரிசை: முதலிடத்தில் ஹெச்சிஎல் டெக்

உலகின் தலைசிறந்த இந்திய நிறுவனங்களின் பட்டியலில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக் முதலிடம் பிடித்துள்ளது.

News image

ஹெச்சிஎல் டெக்

Updated On :16 செப்டம்பர் 2024, 11:15 pm

DIN

புது தில்லி: டைம் இதழ் வெளியிட்டுள்ள 2024-ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த இந்திய நிறுவனங்களின் பட்டியலில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக் முதலிடம் பிடித்துள்ளது.

நொய்டாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள அந்த நிறுவனம், தொழில்முறை சேவையளிக்கும் சிறந்த 10 நிறுவனங்களின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி (நிறுவன செயல்பாடுகள்) ராகுல் சிங் கூறுகையில், ‘மிகச் சிறந்த சேவைகள், புத்தாக்கம் ஆகியவற்றுக்கு நிறுவனம் அளிக்கும் முக்கியத்துவத்தை டைம் இதழ் அளித்துள்ள இந்த கௌரவம் பறைசாற்றுகிறது’ என்றாா்.

பணியாளா் திருப்தி, வருவாய் வளா்ச்சி, நீடித்து நிலைக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் தலைசிறந்த நிறுவனங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.