எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இந்தியாவில் ஐ-போன் 16 விற்பனை தொடக்கம்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகமான ஐ-போன் 16 வரிசை அறிதிறன்பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) விற்பனை இந்தியாவில் வெள்ளிக்கிழமை (செப். 20) தொடங்கியது.

News image
Updated On :21 செப்டம்பர் 2024, 12:45 am

DIN

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகமான ஐ-போன் 16 வரிசை அறிதிறன்பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) விற்பனை இந்தியாவில் வெள்ளிக்கிழமை (செப். 20) தொடங்கியது.

இது குறித்து நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது:

ஐ-போன் 16 மற்றும் 16 ப்ரோ ரக அறிதிறன்பேசிகளின் விற்பனை இந்தியாவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அவற்றில் ஐ-போன் 16 ப்ரோ ரூ.1,19,900-லிருந்தும் ஐ-போன் ப்ரோ மேக்ஸ் ரூ.1,44,900-லிருந்தும் கிடைக்கும்.ஐ-போன் ப்ரோ வரிசை அறிதிறன்பேசிகளை விரைவில் இந்தியாவிலேயே தயாரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இந்தியச் சந்தையில் முந்தைய ரக ஐ-போன்களைவிட குறைவான விலையில் புதிய ரகத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்துவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.ஐ-போன் 15 ப்ரோ மற்றும் ஐ-போன் 15 ப்ரோ மேக்ஸ் ரகங்களை அந்த நிறுவனம் முறையே ரூ.1,34,900 மற்றும் ரூ.1,59,900-க்கு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.