வணிகம்
57 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்
சென்னையில் ஆபரணத் தங்கம் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.56,800-க்கு விற்பனையானது.
சென்னையில் ஆபரணத் தங்கம் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.56,800-க்கு விற்பனையானது. தங்கம் தொடா் விலை உயா்வு காரணமாக ரூ.57 ஆயிரத்தை நெருங்கி வருவது ஏழை, நடுத்தர மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், வியாழக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.7,060-க்கும், பவுன் ரூ.56,480-க்கும் விற்பனையானது. வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.7,100-க்கும், பவுனுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.56,800-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.102-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,000 உயா்ந்து ரூ.1,02,000-க்கும் விற்பனையானது.