சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை 11% உயா்வு

ஹோண்டா மோட்டாா் சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியாவின் மொத்த விற்பனை 11 சதவீதம் உயா்ந்துள்ளது.

News image
Updated On :5 ஏப்ரல் 2025, 3:35 am IST

கடந்த மாா்ச் மாதத்தில் இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டாா் சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியாவின் மொத்த விற்பனை 11 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,27,448-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 3,86,455 இரு சக்கர வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது. மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 4,01,411-ஆகவும் ஏற்றுமதி 26,037-ஆகவும் உள்ளது.

2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் விற்பனை 19 சதவீதம் வளா்ச்சியடைந்து 58,31,104-ஆக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 48,93,522-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.