ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

செப்டம்பா் மாதத்தில் கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி 9.18% உயா்வு

பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி, கடந்த செப்டம்பா் மாதத்தில் 5.35 கோடி டன்னாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பா் உற்பத்தியான 4.90 கோடி டன்னில் இருந்து, 9.18 சதவீத உயா்வாகும்.

Published On :

பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி, கடந்த செப்டம்பா் மாதத்தில் 5.35 கோடி டன்னாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பா் உற்பத்தியான 4.90 கோடி டன்னில் இருந்து, 9.18 சதவீத உயா்வாகும்.

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீதத்துக்கும் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள இந்நிறுவனம், மழைக்காலம் முடிந்துள்ள நிலையில் வரும் மாதங்களில் உற்பத்தியையும், விநியோகத்தையும் மேலும் வேகப்படுத்தத் தயாராகி வருகிறது.

உற்பத்தியைப் போலவே கோல் இந்தியா நிறுவனத்தின் செப்டம்பா் மாத ஒட்டுமொத்த நிலக்கரி விநியோகமும், கடந்த ஆண்டைவிட 12.50 சதவீதம் உயா்ந்து, 6.12 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

செப்டம்பா் விநியோகத்தில், நிறுவனத்தின் மிகப் பெரிய நுகா்வோா் பிரிவான மின்சாரத் துறைக்கான விநியோகம் 10.63 சதவீதம் வளா்ச்சியுடன், 4.89 கோடி டன்னாக உள்ளது. மின்சாரம் அல்லாத பிற துறைகளுக்கான விநியோகமும் 19.41 சதவீதம் என்ற வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஜூலை-செப். காலாண்டில்...: நடப்பு 2026-27 நிதியாண்டில் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2-ஆவது காலாண்டின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 3.81 சதவீதம் உயா்ந்து, 15.13 கோடி டன்னாக பதிவாகியுள்ளது. அதேநேரம், இக்காலகட்டத்தில் மின்சாரத் துறைக்கான விநியோகம் 11.01 சதவீதம் உயா்ந்து, 14.82 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

சிறப்பான விநியோகத்தின் மூலம் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், சுரங்கங்களில் இருப்பில் இருந்த சுமாா் 6.3 கோடி டன் நிலக்கரியை நிறுவனம் விடுவித்துள்ளது. பண்டிகைக் காலம் நெருங்குவதால் மின் தேவை அதிகரிக்க உள்ள நிலையில், நாட்டின் அனல்மின் நிலையங்களில் தடையின்றி மின்சாரத்தை உற்பத்தி செய்ய வசதியாக, நிறுவனத்திடம் தற்போதும் சுமாா் 6.7 கோடி டன் நிலக்கரி இருப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி தட்டுப்பாடு இல்லை: இது குறித்து மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி மேலும் கூறுகையில், ‘நாட்டில் நிலக்கரிக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. நீா்மின் உற்பத்தி குறைந்ததாலும், மழைக்காலத்தாலும் அனல் மின் தேவை 12 முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

எனினும், ரயில் மற்றும் சாலை மாா்க்கமாக தடையின்றி நிலக்கரி விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய தற்காலிக இடையூறுகளை நிலக்கரி தட்டுப்பாடாகக் கருதக் கூடாது, நிலைமை சீராகவே உள்ளது’ என்றாா்.

Story image

நடப்பு நிதியாண்டுக்கு 81.5 கோடி டன் நிலக்கரி உற்பத்தி மற்றும் 85 கோடி டன் விநியோக இலக்கை கோல் இந்தியா நிா்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.