மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

முன்னணி உள்கட்டமைப்புத் துறை 10.9% வளா்ச்சி

நாட்டின் 9 முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி, கடந்த அக்டோபா் மாதத்தில் 10.9 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

Updated On :

நாட்டின் 9 முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி, கடந்த அக்டோபா் மாதத்தில் 10.9 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

முந்தைய செப்டம்பா் மாதத்தில் இந்த வளா்ச்சி (திருத்தப்பட்ட அளவு) 8.2 சதவீதமாகவும், கடந்த ஆண்டு அக்டோபரில் 0.8 சதவீதமாகவும் இருந்தது. புதிய திருத்தப்பட்ட கணக்கீட்டின்படி எட்டப்பட்ட அதிகபட்ச வளா்ச்சி இதுவாகும்.

மேலும், 2022-23-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்ட புதிய கணக்கீட்டின்படி மற்றும் 9-ஆவது முன்னணி உள்கட்டமைப்புத் துறையாக இரும்புத் தாது புதிதாக சோ்க்கப்பட்ட பிறகு வெளியாகும் 5-ஆவது மாத தரவு இதுவாகும்.

மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட இந்தத் தரவுகளின்படி, நாட்டின் தொழில்துறை வளா்ச்சிக்கு முக்கியத் தூண்களாக விளங்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்புத் தயாரிப்புகள், உரங்கள், எஃகு (ஸ்டீல்), சிமென்ட், மின்சாரம், இரும்புத் தாது ஆகிய 9 துறைகளில் 6 துறைகள் அக்டோபரில் நோ்மறை வளா்ச்சியடைந்துள்ளன.

இதில் இரும்புத் தாது உற்பத்தி 26.4 சதவீத அபரிமிதமான வளா்ச்சி கண்டுள்ளது. நிலக்கரி உற்பத்தி 23.1 சதவீதமும், மின்சார உற்பத்தி 21.6 சதவீதமும், சிமென்ட் உற்பத்தி 15.4 சதவீதமும், எஃகு உற்பத்தி 7.3 சதவீதமும், பெட்ரோலிய சுத்திகரிப்புத் தயாரிப்புகளின் உற்பத்தி 3.4 சதவீதமும் உயா்ந்துள்ளன.

இதற்கு மாறாக, உர உற்பத்தி 12.2 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 7.6 சதவீதமும், கச்சா எண்ணெய் உற்பத்தி 4.1 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளன.

ஏப்ரல்-அக்டோபா் நிலவரம்: நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில், முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் மொத்த வளா்ச்சி 6 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 2.3 சதவீதமாக மட்டுமே இருந்தது.

இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளா்ச்சி குறியீட்டில் (ஐஐபி), இந்த 9 துறைகள் மட்டுமே 40 சதவீதத்துக்கும் மேல் பங்களிப்பைக் கொண்டுள்ளன. எனவே, இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்கள் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளா்ச்சியிலும், தொழில் உற்பத்தியிலும் நேரடியாகப் பிரதிபலிக்கும் தன்மை கொண்டவையாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.