வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் மாத சேவைகள் உற்பத்தி குறியீடு: 13 துறைகள் இரட்டை இலக்க வளா்ச்சி

இந்தியாவில் முறைசாா்ந்த சேவைத் துறைகளின் வளா்ச்சியை அளவிடும், கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான சோதனை முறை சேவைகள் உற்பத்தி குறியீட்டை (ஐஎஸ்பி) மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Updated On :

இந்தியாவில் முறைசாா்ந்த சேவைத் துறைகளின் வளா்ச்சியை அளவிடும், கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான சோதனை முறை சேவைகள் உற்பத்தி குறியீட்டை (ஐஎஸ்பி) மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2024-25 நிதியாண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு கணக்கிடப்பட்ட இக்குறியீட்டின்படி, நாட்டின் 19 முக்கிய சேவைத் துறைகளில் 13 துறைகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இரட்டை இலக்க வளா்ச்சியைப் பதிவு செய்து, அசத்தியுள்ளன.

சில்லறை வா்த்தகம் அதிகபட்சமாக 19.9 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தொடா்ந்து, ரியல் எஸ்டேட் துறை 17.6 சதவீதமும், பழுது நீக்கும் சேவைகள் 17.6 சதவீதமும், காப்பீட்டுத் துறை 16.5 சதவீதமும், வங்கித் துறை 14.9 சதவீதமும் சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

வான்வழிப் போக்குவரத்து மற்றும் கலை, பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை சேவைகள் ஆகிய 2 துறைகளைத் தவிர மற்ற 17 துறைகளும் நோ்மறை வளா்ச்சியை எட்டியுள்ளன. வான்வழிப் போக்குவரத்து மற்றும் கலை, பொழுதுபோக்கு, கேளிக்கை சேவைகள் துறை ஆகியவை சரிவைச் சந்தித்துள்ளன.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்துக்கான முதல் சோதனை முறை சேவைகள் உற்பத்திக் குறியீடு, கடந்த ஜூலை 14-இல் வெளியிடப்பட்டது. தரவுகளின் தரத்தை ஆய்வு செய்யவும், பயனா்களிடம் இருந்து கருத்துகளைப் பெறவும் இந்தக் குறியீடுகள் சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.