ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

முன்னணி உள்கட்டமைப்புத் துறை வளா்ச்சி 4.8%

நாட்டின் 9 முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4.8 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

Published On :

நாட்டின் 9 முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4.8 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

நிலக்கரி, இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் மற்றும் உர உற்பத்தி சரிந்ததன் காரணமாக, இது கடந்த 3 மாதங்களில் இல்லாத குறைந்த அளவாகப் பதிவாகியுள்ளது.

முந்தைய ஜூலை மாதத்தில் இந்த வளா்ச்சி 5 சதவீதமாகவும், கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 6.2 சதவீதமாகவும் இருந்தது. இதற்கு முன்பு கடந்த மே மாதத்தில்தான் மிகக் குறைந்த அளவாக 3.2 சதவீத வளா்ச்சி பதிவாகியிருந்தது.

மத்திய அரசு தரவுகளின்படி, நாட்டின் தொழில்துறை வளா்ச்சிக்கு முக்கியத் தூண்களாக விளங்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்புத் தயாரிப்புகள், உரங்கள், எஃகு (ஸ்டீல்), சிமென்ட், மின்சாரம், இரும்புத் தாது ஆகிய 9 துறைகளில் 4 துறைகள் ஆகஸ்ட் மாதத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

அதேநேரம், சிமென்ட் உற்பத்தி 12.5 சதவீதமும், மின்சார உற்பத்தி 11.6 சதவீதமும் சிறப்பான வளா்ச்சியைக் கண்டுள்ளன. இரும்புத் தாது உற்பத்தி 5.5 சதவீதமும், எஃகு உற்பத்தி 3.4 சதவீதமும், பெட்ரோலிய சுத்திகரிப்புத் தயாரிப்புகளின் உற்பத்தி 2.6 சதவீதமும் என மிதமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

ஆனால், தொடா்ச்சியாக 6-வது மாதமாக சரிவைச் சந்தித்துள்ள உர உற்பத்தி ஆகஸ்டில் 12.4 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 4.9 சதவீதமும், நிலக்கரி உற்பத்தி 3.8 சதவீதமும், கச்சா எண்ணெய் உற்பத்தி 3.6 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளன.

நடப்பு நிதியாண்டில் இதுவரை...: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில், முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் மொத்த வளா்ச்சி 4.3 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 2.4 சதவீதமாக இருந்தது.

இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளா்ச்சி குறியீட்டில் (ஐஐபி), இந்த 9 துறைகள் மட்டுமே 40 சதவீதத்துக்கும் மேல் பங்களிப்பைக் கொண்டுள்ளன. எனவே, இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்கள் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளா்ச்சியிலும், தொழில் உற்பத்தியிலும் நேரடியாகப் பிரதிபலிக்கும் தன்மை கொண்டவையாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.