
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பிவரும் ஜியோ ஹாட்ஸ்டார் தளம் 20 கோடி கட்டண சந்தாதாரர்களை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் மாத இறுதியில் 10 கோடி சந்தாதாரர்களை எட்டியதாக ஜியோ அறிவித்திருந்த நிலையில், தற்போது குறுகிய காலத்தில் மிகப்பெரிய இலக்கை ஜியோ ஹாட்ஸ்டார் எட்டியுள்ளது. ஆங்கில ஊடகமான பூளும்பெர்க் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
வால்ட் டிஸ்ட்னி, போதி ட்ரீ மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய கூட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர் உதய் சங்கர் கூறியதாவது,
’’நாங்கள் 20 கோடி கட்டண சந்தாதாரர்களை எட்டியுள்ளோம். இது உலகில் உள்ள பெரிய ஒளிபரப்பு ஓடிடி தளங்களில் ஒன்றாக எங்களை மாற்றியுள்ளது. குறுகிய காலத்தில் இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான கட்டண சந்தாதாரர்களைப் பெற்றது மிகவும் நிறைவாக உள்ளது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
டிஸ்ட்னி + ஹாட்ஸ்டார் நிறுவனமானது பிப்ரவரி 14ஆம் தேதி ஜியோ சினிமாவுடன் இணைக்கப்பட்டு ஜியோ ஹாட்ஸ்டாரானது. ஆரம்பத்தில் 5 கோடி கட்டண சந்தாதாரர்கள் இருந்த நிலையில், கடந்த இரு மாதங்களில் 150 சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளனர்.
இதையும் படிக்க | 16% சரிந்த தாவர எண்ணெய் இறக்குமதி