மின்வாரியத்தில் 2,600 ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு! கூடுதலாக 2,400 பணியாளர்கள்! நிர்மல் குமார்ஹைதராபாத் விமான நிலையத்தின் எக்ஸ் தள கணக்கு முடக்கம்! விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் கூடாது! தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்மதுராந்தகம் தொகுதிக்கு 11 புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர் விஜய்!புதுச்சேரி திமுகவை மறுசீரமைக்க குழு அமைப்பு மும்பையில் நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச் சூடு! 3 பேர் கைது அண்ணன் சீர் திட்டத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம்: அரசாணை வெளியீடு!அன்புமணிக்கு காலில் அறுவைச் சிகிச்சை: 2 வாரங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தல்!

சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு

Updated On :

முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா, கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 11 சதவீத விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 12,56,161 இரு சக்கர வாகனங்களை நிறுவனம் விற்பனை செய்துள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 11,33,902-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

2024-25 நிதியாண்டில் நிறுவனம் இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கையில் 10,45,662 இரு சக்கர வாகனங்களை உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்துள்ளது. முந்தைய 2023-24-ஆம் ஆண்டுடன் (9,21,009) ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் அதிகம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.