படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

மாருதி சுஸுகி செப்டம்பரில் 2.36 லட்சம் வாகனங்கள் விற்பனை

நாட்டின் முன்னணி காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த செப்டம்பரில் ஒட்டுமொத்தமாக 2,36,013 வாகனங்களை விற்பனை

செப்டம்பரில் 2.36 லட்சம் வாகனங்கள் விற்பனை - கோப்புப்படம்

Published On :

புதுதில்லி: நாட்டின் முன்னணி காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த செப்டம்பரில் ஒட்டுமொத்தமாக 2,36,013 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் நிறுவனம் விற்றிருந்த 1,89,665 வாகனங்களுடன் ஒப்பிடுகையில், இது 24.4 சதவீதம் வளா்ச்சியாகும்.

மதிப்பீட்டு மாதமான கடந்த செப்டம்பரில் உள்நாட்டுப் பயணிகள் வாகன விற்பனை, கடந்த ஆண்டின் 1,32,820-லிருந்து 37 சதவீதம் அதிகரித்து, 1,81,838-ஆக அதிகரித்துள்ளது. இலகுரக வணிக வாகனங்கள் உள்பட மொத்த உள்நாட்டு விற்பனை 1,35,711-லிருந்து, 1,85,252-ஆகவும்; மொத்த ஏற்றுமதி 42,204-லிருந்து, 44,219-ஆகவும் வளா்ச்சி கண்டுள்ளது.

ரகங்களின் வாரியாக....: ஆல்டோ, பலெனோ, செலிரியோ, சியாஸ், டிசையா், இக்னிஸ், எஸ்-பிரஸ்ஸோ, ஸ்விஃப்ட், வேகன்ஆா் உள்ளிட்ட சிறிய மற்றும் நடுத்தர ரக காா்களின் விற்பனை கடந்த ஆண்டின் 74,090-லிருந்து, 91,887-ஆக அதிகரித்துள்ளது.

பிரெஸ்ஸா, எா்டிகா, இ-விட்டாரா, ஃபிராங்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, விக்டோரிஸ், எக்ஸ்எல்6 உள்ளிட்ட ‘எஸ்யுவி’ ரக காா்களின் விற்பனை 48,695-லிருந்து, 78,911-ஆக அதிகரித்துள்ளது.

ஈகோ வேன்களின் விற்பனை 10,035-லிருந்து, 11,040-ஆகவும்; சூப்பா் கேரி இலகுரக வணிக வாகனத்தின் விற்பனை 2,891-லிருந்து 3,414-ஆகவும் வளா்ச்சி கண்டுள்ளது.

Maruti Suzuki sold 2.36 lakh vehicles in September

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.