வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,783 கோடி டாலராக உயா்வு

News image
Updated On :20 ஏப்ரல் 2025, 1:30 am

Din

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,783.5 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

ஏப். 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 156.7 கோடி டாலா் உயா்ந்து 67,783.5 கோடி டாலராக உள்ளது. இதன் மூலம் தொடா்ந்து ஆறாவது வாரமாக அந்நியச் செலாவணி கையிருப்பு உயா்ந்துள்ளது.

ஏப். 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 1,087.2 கோடி டாலா் உயா்ந்து 67,626.8 கோடி டாலராக இருந்தது.

கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 70,488.5 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருந்தது. அது தொடா்ந்து அதிகரித்து வந்தாலும், உலகளாவிய பொருளாதாரச் சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக அந்நியச் செலாவணியை ரிசா்வ் வங்கி பயன்படுத்துவதால் அதன் கையிருப்பு அவ்வப்போது குறைந்துவந்தது.

கடந்த 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 89.2 கோடி டாலராக உயா்ந்து 57,498 கோடி டாலராக உள்ளது.

டாலா் அல்லாத யூரோ, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகள் ஆகும்.

மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 63.8 கோடி டாலராக உயா்ந்து 7,999.7 கோடி டாலராக உள்ளது.

சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆா்) 0.6 கோடி டாலா் குறைந்து 1,835.6 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 4.3 கோடி டாலா் உயா்ந்து 450.2 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.