திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஏப். 30-ல் அறிமுகமாகிறது மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ!

மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏப்ரல் 30ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.

News image

மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ - நன்றி - மோட்டோரோலா

Updated On :28 ஏப்ரல் 2025, 5:45 pm IST

மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏப்ரல் 30ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.

எட்ஜ் 60 வரிசையில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என மோட்டோரோலா குறிப்பிட்டுள்ளது.

கேமரா, பேட்டரி திறன் மற்றும் புற வடிவத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள எட்ஜ் 60 ப்ரோ, அறிமுகமாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது மோட்டோரோலா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முதலில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அங்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்திய சந்தைகளுக்கும் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ அறிமுகமாகிறது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்து இணையத்தில் பல்வேறுவிதமான தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், உண்மையான சிறப்புகள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.

  • எட்ஜ் 60 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன் 6.77 அங்குல திரை கொண்டது. அமோல்ட் ( AMOLED) அம்சத்துடன் பயன்படுத்துவதற்கு சுமுகமாக இருக்கும் வகையில் 144 Hz திறன் கொண்டது.

  • மீடியாடெக் டைமன்சிட்டி 8350 புராசஸருடன் 8GB / 12GB செயலிகளுக்கான உள்நினைவகத்தையும் 512GB கோப்புகளுக்கான நினைவகத்தையும் கொண்டுள்ளது.

  • இதில் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 50MP மெயின் கேமரா, 50MP டெலிபோட்டோ லென்ஸ், 3x ஜூம் லென்ஸ் என மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்பக்கமும் 50MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

  • மோட்டோரோலாவில் மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதைப் போன்று அல்லாமல், கூடுதலாக பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. 6000mAh பேட்டரி திறனுடன் 90W அதிவேகமாக சார்ஜ் செய்யும் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

  • IP68 + IP69 என நீர் புகாத்தன்மை மற்றும் தூசு சேராத்தன்மை கொண்ட அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.

புற வடிவத்தின் சிறப்பு

மற்ற ஸ்மார்ட்போன்களைப் போல் அல்லாமல், தோல் வடிவ புறத்தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பின்புறத்தில் கூடுதலாக எந்தவொரு பாதுகாப்பு கவசங்களும் தேவைப்படாது. திரையிலேயே விரல் தொடுகை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை எவ்வளவு?

ஏப். 30ஆம் தேதி முதல், இந்திய சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ, ரூ. 31,999-க்கு கிடைக்கும். ஃபிளிப்கார்ட் இணையதளத்திலும் மோட்டோரோலா விற்பனைக் கிளைகளிலும் இதனை பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.