
இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் விலை 16% அதிகரிப்பு!
இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலை சராசரியாக 16 சதவீதம் உயர்ந்துள்ளது.

கோப்புப் படம்
புதுதில்லி: இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலை சராசரியாக 16 சதவீதம் உயர்ந்துள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில் மக்களுக்கு ஸ்மார்ட்போன் அத்தியாவசியமான ஒரு தொழில்நுட்ப கருவியாக உள்ளது. தொலைத்தொடர்பு சாதனம் என்ற எல்லையை கடந்து பல்வேறு தேவைகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுகிறது. ஸ்மார்ட்போன்களின் உள்ள மெமரி சிப்தான் ஸ்டோரேஜை உறுதி செய்யும். தற்போது இந்த சிப் தாயாரிக்கும் நிறுவனங்கள் ஏஐ தரவு மையங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறதால் சிப் தேவையுள்ள மற்ற தொழில்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
மெமரி உதிரிபாகங்களின் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவை இதற்கான முக்கிய காரணிகளாக அமைந்தன. ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதால், இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்களின் விலை உயர்ந்து, உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது.
2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விலை சராசரியாக 16 சதவீதம் உயர்ந்தன. ஆனால் ஒன்ப்ளஸ் தனது விலை உயர்வை 8 சதவீதமாக மட்டுமே கட்டுக்குள் வைத்திருந்தது. மெமரி உதிரிபாகங்களின் விலை உயர்ந்ததால் இந்த விலை உயர்வு என்றது. இதன் விளைவாக, 2026 ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் சராசரி விற்பனை விலை சாதனை அளவாக 318 டாலராக உயர்ந்தது.
ரூ. 10,000 க்கும் குறைவான விலையிலான ஸ்மார்ட்போன்கள் சராசரியாக 32 சதவீதம் கடுமையான விலை உயர்வை சந்தித்தன. ஏனெனில், இத்தகைய சாதனங்களின் உற்பத்திச் செலவில் மெமரி உதிரிபாகங்களின் பங்கு கணிசமாக அதிகரித்தது. 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில், ரூ. 10,000 ரூபாய்க்கும் குறைவான விலைப் பிரிவில் ஸ்மார்ட்போன் விநியோகம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 65 சதவீதம் சரிந்தது. அதே வேளையில் ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரையிலான பிரிவிலும் விற்பனை 20 சதவீதம் குறைந்தது.
இதற்கிடையில் ரூ. 20,000 அதிகமான விலையிலான ஸ்மார்ட்போன்களின் விற்பனை தொடர்ந்து வளர்ச்சியைப் பதிவு செய்தது. பழைய ஸ்மார்ட்போனை மாற்றிக்கொள்ளும் சலுகை மற்றும் வட்டி இல்லா தவணை முறை உள்ளிட்டவை விலை உயர்ந்த போன்களை வாங்குவதை எளிதாக்கியது.
Summary
Mobile phone prices have increased by 16 per cent in India due increase in the cost of memory.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






