
தொடர்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் (ஆக. 7) இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு, இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
கூடுதலாக 25 சதவிகிதம் உள்பட மொத்தம் இந்தியா இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் புதன்கிழமை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 335.71 புள்ளிகள் குறைந்து 80,208 ஆக வர்த்தகமாகிறது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 114.15 புள்ளிகள் சரிவுடன் 24,460.05 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது.
காலை 10 மணிநிலவரப்படி நிஃப்டி வங்கி, ரியால்டி சரிவுடனும் நிஃப்டி ஐடி, நிஃப்டி பார்மா லாபத்துடனும் வர்த்தகமாகி வருகின்றது.
சென்செக்ஸ் பொறுத்தவரை டிரெண்ட், ஐடிசி, டெக்எம், டைட்டன், எச்டிஎஃப்சி வங்கி தவிர, பெரும்பாலான முன்னணி நிறுவனங்களின் பங்குகள் காலை 10 மணி நிலவரப்படி சரிவுடன் வர்த்தகமாகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.