
புது தில்லி: இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் அதிக வரி குறித்து 'எஃப்ஐஇஓ' (FIEO) கடும் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.
மோசமடைந்து வரும் செலவு, போட்டித்தன்மையின் காரணமாக திருப்பூர், நொய்டா மற்றும் சூரத்தில் உள்ள ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்தியதாக தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 27 முதல் இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகள் 50 சதவிகிதமாக அதிகரிக்கும். ஏற்றுமதி பொறுத்த வரையில், இந்தியப் பொருட்களின் ஓட்டத்தை இது கடுமையாக பாதிக்கும் என்று இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (FIEO) தலைவர் எஸ்.சி. ரால்ஹான் தெரிவித்தார்.
இந்த வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கக்கூடும். இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குச் செல்லும் ஏற்றுமதிகளில் சுமார் 55 சதவிகிதம், இப்போது 30 முதல் 35 சதவிகத விலை நிர்ணய குறைபாடுகளுக்கு ஆளாகியுள்ளது.
இதனால் சீனா, வியட்நாம், கம்போடியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிற தென்கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த அதன் போட்டியாளர்களுடன் திறம்பட போட்டியிட முடியாத சூழல் தற்போது உருவாகியுள்ளது.
தாமதங்கள், ஆர்டர்கள் ரத்து செய்தல் மற்றும் நிராகரிக்கப்பட்ட செலவுகள் ஆகியவை இந்தத் துறைகளில் பெரிய அளவில் உள்ள நிலையில் அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவிகித வரி விதித்திருப்பது குறித்து 'எஃப்ஐஇஓ' கடும் கவலையை வெளிப்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க: அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.