வங்கிப் பங்குகள் சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

சென்செக்ஸ் 503.63 புள்ளிகள் சரிந்து 85,138.27 புள்ளிகளாகவும், 50 பங்குகள் கொண்ட நிஃப்டி 143.55 புள்ளிகள் சரிந்து 26,032.20 புள்ளிகளாக நிலைபெற்றது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

மும்பை: இன்றைய வர்த்தகத்தில், ப்ளூ-சிப் வங்கிப் பங்குகள் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் விற்பனையை தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் உள்ளிட்ட காரணத்தால் சென்செக்ஸ் 504 புள்ளிகள் சரிந்தன.

இன்றைய வர்த்தகத்தில், 3-வது அமர்வில், பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் 588.9 புள்ளிகள் சரிந்து 85,053 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 503.63 புள்ளிகள் சரிந்து 85,138.27 புள்ளிகளாகவும், 50 பங்குகள் கொண்ட நிஃப்டி 143.55 புள்ளிகள் சரிந்து 26,032.20 புள்ளிகளாக நிலைபெற்றது.

உலோகம், எண்ணெய் & எரிவாயு, தனியார் வங்கி, நுகர்வோர் சாதனங்கள், ஊடகக் குறியீடுகள் தலா 0.5% சரிவுடனும் மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவில் முடிவடைந்தன.

சென்செக்ஸில் ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகியவை சரிந்த நிலையில், ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி, பாரதி ஏர்டெல் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி-யில் இன்டர்குளோப் ஏவியேஷன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை சரிந்த நிலையில் ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மஹிந்திரா, டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் மாருதி சுசுகி ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன.

பங்கு சார்ந்த நடவடிக்கையில், ஆம்ஜெனுடன் தீர்வு காணப்பட்டதால் பயோகான் பங்குகள் கிட்டத்தட்ட 2% உயர்ந்தன. உற்பத்தி 11% அதிகரித்ததால் என்எம்டிசி பங்குகள் 1% அதிகரிப்பு.

மத்திய வரி மற்றும் கலால் வரி இணை ஆணையரிடமிருந்து ரூ.117.52 கோடி அபராதம் விதிக்கப்பட்டதால் இன்டர்குளோப் ஏவியேஷன் பங்குகள் 1.5% சரிந்தன. நவம்பரில் ரூ.884 கோடி மதிப்புள்ள இ.பி.சி. ஆர்டர்களைப் பெற்றதால் ஆஃப்கான்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்குகள் 1.2% அதிகரிப்பு. லிண்டனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதால் வெப்சோல் எனர்ஜி சிஸ்டம் பங்குகள் 5% உயர்ந்தன.

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, அசோக் லேலேண்ட், ஹிட்டாச்சி எனர்ஜி, ஃபெடரல் வங்கி, ஜிஎம்ஆர் விமான நிலையங்கள், பேடிஎம், கம்மின்ஸ் இந்தியா, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார உச்சத்தை எட்டியது.

பஜாஜ் ஹவுசிங், பிசிபிஎல் கெமிக்கல்ஸ், கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்ஷன், கிளீன் சயின்ஸ், தீபக் நைட்ரைட், கோஹன்ஸ் லைஃப், பாட்டா இந்தியா, மகாநகர் கேஸ், சிஜி கன்ஸ்யூமர், சம்பல் ஃபெர்டிலைசர்ஸ், எஸ்ஜேவிஎன், கோல்கேட் பாமோலிவ், பேஜ் இண்டஸ்ட்ரீஸ், யுனைடெட் ப்ரூவரீஸ் உள்ளிட்ட 240க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார குறைந்த அளவை எட்டியது.

ஆசிய சந்தைகளில், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிந்த நிலையில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு ஆகியவை உயர்ந்து முடிந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.1,171.31 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,558.93 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஐரோப்பாவில் சந்தைகள் உயர்ந்து வர்த்தகமான நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழைமை) சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.33% குறைந்து 62.96 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இதையும் படிக்க: ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸுக்கு 3 விருதுகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com