

பங்குச் சந்தைகள் இன்று(புதன்கிழமை) சரிவில் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,150.64 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.15 மணியளவில் சென்செக்ஸ் 305.71 புள்ளிகள் குறைந்து 84,825.00 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 129.75 புள்ளிகள் குறைந்து 25,902.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸ் நிறுவனங்களில், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பாரத் எலக்ட்ரானிக்ஸ், டைட்டன், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவைச் சந்தித்து வருகின்றன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்டவை லாபம் ஈட்டி வருகின்றன.
சென்செக்ஸ் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.5% சரிந்தன. ஐடி, டெலிகாம் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் சரிவில் வர்த்தகமாகின்றன.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்து ரூ. 90-யைக் கடந்துள்ளது, இந்திய ரிசர்வ் வங்கியின் கூட்டம், மோடி - புதின் சந்திப்பு, வெளிநாட்டவர்களின் பங்குகள் விற்பனை, வங்கித்துறை பங்குகள் சரிவு உள்ளிட்டவை பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.