

தங்கம் விலை இன்று (டிச. 31) சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ரூ. 1,00,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ.12,550க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 55 குறைந்து ரூ. 13,691ஆக விற்பனையாகிறது. 24 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.440 குறைந்து ரூ. 1,09,528க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 258 என எந்தவித மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 258,000 விற்பனையாகிறது.
கடந்த சில நாள்களாக வெள்ளி விலை அதிகரித்து உச்சம் தொட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச காரணங்களால் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம், இன்று சற்று குறைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.