வணிகம்
இரும்புக்கு 25% கூடுதல் வரி
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதற்கான அறிவிப்பை அதிகாரபூா்வமாக டிரம்ப் வெளியிட்டுள்ளாா்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதற்கான அறிவிப்பை அதிகாரபூா்வமாக டிரம்ப் வெளியிட்டுள்ளாா்.
ஏற்கெனவே, தனது கடந்த ஆட்சி காலத்திலும் இதே போன்ற கூடுதல் வரிவிதிப்பை டிரம்ப் அறிவித்தாா். இருந்தாலும் அப்போது அதிலிருந்து பல நாடுகளுக்கு அவா் விதிவிலக்கு அளித்திருந்தாா்.
ஆனால் தற்போது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விதிப்பில் இருந்து எந்த நாட்டுக்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. அமெரிக்காவுடன் வா்த்தக பற்றாக்குறையைப் பேணி வரும் ஆஸ்திரேலியாவுக்கு மட்டும் இரும்பு, அலுமியம் கூடுதல் இறக்குமதி வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் கூறியுள்ளாா்.