வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

1000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ், நிஃப்டி 1.4% வீழ்ச்சி!

வணிக நேரத் தொடக்கத்தில் சரிவுடன் தொடங்கிய வணிகம் பிற்பாதியில் கடும் சரிவைச் சந்தித்தது.

News image
கோப்புப் படம்
Updated On :11 பிப்ரவரி 2025, 8:16 am

DIN

இந்திய பங்குச் சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிஃப்டி 23,100 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.

வணிக நேரத் தொடக்கத்தில் சரிவுடன் தொடங்கிய வணிகம் பிற்பாதியில் கடும் சரிவை எட்டியுள்ளது.

வெளிநாட்டு நிதி வெளியேற்றம் மற்றும் உள்ளூர் முதலீட்டாளர்களிடையே நிலவும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,036.34 புள்ளிகள் சரிந்து 76,275.45 புள்ளிகளாக வணிகம் நடைபெற்று வருகிறது. மொத்த வணிகத்தில் இது 1.34 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 346.75 புள்ளிகள் சரிந்து 23,034.85 புள்ளிகளாக வணிகம் நடைபெற்று வருகிறது. இது மொத்த வணிகத்தில் 1.37 சதவீதம் சரிவாகும்.

வணிக நேரத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 47 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. நிஃப்டி 30 புள்ளிகள் சரிவுடனும் வணிகம் ஆரம்பமானது.

ஒரு நிறுவனம் கூட ஏற்றத்தில் இல்லை

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில், ஒரு நிறுவனத்தின் பங்கு கூட ஏற்றத்தில் இல்லை. அனைத்து நிறுவனங்களின் பங்குகளுமே சரிவில் வணிகமாகி வருகின்றன.

இதில் அதிகபட்சமாக சொமாட்டோ நிறுவனத்தின் பங்குகள் -5.4% சரிவைச் சந்தித்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக பவர் கிரிட் -3.03%, டாடா மோட்டார்ஸ் -2.67%, எல்&டி -2.47%, டாடா ஸ்டீல் -2.41%, கோட்டாக் வங்கி -2.31%, ஹிந்துஸ்தான் யூனிலிவர்ஸ் -2.25%, பஜாஜ் ஃபின்சர்வ் -2.16%, அதானி போர்ட்ஸ் -2.11% சரிந்துள்ளன.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் டிம்கின் இந்தியா, ஃபர்ஸ்ட் சோர்ஸ், ஹேப்பியஸ்ட் மைண்ட், சோழா ஃபைனான்சியல், அதானி எண்டர்டெயின்மென்ட், ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.