சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ. 320 வியாழக்கிழமை உயர்ந்துள்ளது.
அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள் முதலே தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயா்ந்து வருகிறது.
வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.7,980-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.63,840-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து சவரன் ரூ. 64,480-க்கும் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 8060-க்கு விற்பனையானது.
கடந்த சில நாள்களாக அதிரடி விலை ஏற்றங்களை கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.960 குறைந்து, ரூ.63,520-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், மீண்டும் வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 அதிகரித்து ரூ. 63,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 7,980 ஆக உள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையில் தொடா்ந்து 9-ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.107-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








