மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

நேட்டோவில் உக்ரைன் இணைவது சாத்தியமில்லை: டிரம்ப்

நேட்டோவில் உக்ரைன் இணைவது சாத்தியமில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டொனால்டு டிரம்ப் - AP

Updated On :

நேட்டோவில் உக்ரைனை இணைப்பது நடைமுறைக்கு உகந்தது அல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் மற்றும் ரஷிய அதிபர்கள் விரைவில் நேரில் சந்தித்து போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும், இந்த சந்திப்பானது செளதி அரேபியாவில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் புதன்கிழமை ஒன்றரை மணிநேரத்துக்கு மேல் தொலைபேசியில் பேசிய டிரம்ப், போர் நிறுத்தம் குறித்து விரிவாக பேசியுள்ளார்.

அப்போது, உக்ரைனுடன் போர் நிறுத்த பேச்சுக்கு புதின் ஒப்புக் கொண்டதாகவும், டிரம்ப்பை ரஷியாவுக்கு அழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப், ரஷிய முடிவுகளை தெரிவித்து போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், அமெரிக்காவின் உள்துறை செயலாளர், சிஐஏ இயக்குநர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், நேட்டோவில் உக்ரைனை இணைப்பது நடைமுறைக்கு உகந்தது அல்ல என்றும் தெரிவித்தார்.

நேட்டோவில் இணைய முயற்சித்ததால்தான் உக்ரைன் மீது ரஷியா போரைத் தொடங்கிய நிலையில், டிரம்ப்பின் அறிவிப்பு போர் நிறுத்தத்துக்கான வழியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸில் உக்ரைன் ஆதரவு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதில் அமெரிக்காவின் நிலைபாட்டை தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்,

“ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு இனியும் முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் அமெரிக்கா தற்போது இல்லை.

தற்போதைய நிலையில் உள்நாட்டு பாதுகாப்பிலும் சீன அச்சுறுத்தலை எதிா்கொள்வதிலும் மட்டுமே அமெரிக்கா கவனம் செலுத்துகிறது.

எனவே, ரஷியாவுடனான போரில் உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவு அளிப்பதில் ஐரோப்பிய நாடுகள்தான் இனி முன்னிலை வகிக்க வேண்டும். மேலும், நேட்டோ ராணுவக் கூட்டமைப்புக்கான நிதியுதவியை ஐரோப்பிய நாடுகள் அதிகரிக்க வேண்டும்.

அமைதி ஏற்படவேண்டும் என்றால் ரஷியாவிடம் இழந்த பகுதிகளை இனி திரும்பப் பெற முடியாது என்பதை உக்ரைன் ஏற்றுக்கொண்டாக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.