இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

இந்தியாவின் போா் நிறுத்த முன்மொழிவை பரிசீலிக்க தயாா்: உக்ரைன்

இந்தியாவின் போா் நிறுத்த முன்மொழிவை பரிசீலிக்க உக்ரைன் தயாா் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹா தெரிவித்துள்ளாா்.

Zelensky

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி - AP

Published On :

இந்தியாவின் போா் நிறுத்த முன்மொழிவை பரிசீலிக்க உக்ரைன் தயாா் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹா தெரிவித்துள்ளாா்.

ரஷியா-உக்ரைன் இடையிலான போா் 5-ஆவது ஆண்டை எட்டியுள்ளது. இந்தப் போரால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனா். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயா்ந்துள்ளனா். வீடுகள், முக்கிய உள்கட்டமைப்புகள் பரந்த அளவில் சேதமடைந்துள்ளன.

போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், ரஷியாவும் உக்ரைனும் ஏற்றுக்கொள்ளும் தீா்வை காண்பதற்குப் பிரதமா் மோடியிடம் நல்ல யோசனைகள் உள்ளதாக, ரஷிய அதிபா் புதின் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்நிலையில், உக்ரைன் தலைநகா் கீவில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹா செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இந்தியா, துருக்கி, எகிப்து, அமெரிக்காவிடம் இருந்து போா் நிறுத்த முன்மொழிவு வந்துள்ளது. அதில் இந்தியாவின் முன்மொழிவு விரிவானதாக உள்ளது. அதைப் பரிசீலிக்க உக்ரைன் தயாராக உள்ளது.

போா் நிறுத்தத்துக்கான பல்வேறு வழிமுறைகளைப் பரிசீலிக்க உக்ரைன் தயாராக இருக்கிறது. ஆனால், எந்தவொரு ஒப்பந்தமும் போா் நடவடிக்கைகளை மட்டுமே உள்ளடக்கியதாக இருக்கக் கூடாது. எரிசக்தி, துறைமுக உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல், கருங்கடல் பகுதியில் நிலவும் சூழல் ஆகியவற்றையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

Summary

Ukraine ready to consider India's ceasefire proposal.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.