ஏர் இந்தியாவின் புதிய சிஇஓ-வாக தெவோல்டே கெப்ரேமரியம் பொறுப்பேற்பு!
ஏர் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற தெவோல்டே கெப்ரேமரியம் பற்றி...

ஏர் இந்தியா - file photo
டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் தெவோல்டே கெப்ரேமரியம் முறைப்படி பொறுப்பேற்றார்.
கடந்த ஏப்ரலில் ராஜிநாமாவை அறிவித்த கேம்ப்பெல் வில்சனுக்குப் பதிலாக கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி இவரது நியமனம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தெவோல்டே கெப்ரேமரியம் இன்று முறைப்படி தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
எத்தியோப்பியாவைச் சேர்ந்த இவர், பல்வேறு வெளிப்புறச் சவால்களுக்கு மத்தியிலும் ஏர் இந்தியா தனது லட்சிய விரிவாக்கத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் சூழலில் இப்பொறுப்பை ஏற்றுள்ளார்.
நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியாவை வழிநடத்தும் இரண்டாவது வெளிநாட்டுத் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் இவராவார்.
எத்தியோப்பியன் ஏல்லைன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-ஆக 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய தெவோல்டெ கெப்ரேமரியம், அந்நிறுவனத்தை ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய மற்றும் அதிக லாபம் ஈட்டும் வமான நிறுவனமாக மாற்றிய பெருமைக்குரியவர்.
செப்டம்பர் 28-ஆம் தேதி ஊழியர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கெப்ரேமரியம்,
செலவுக் கட்டுப்பாடு என்பது ஏர் இந்தியாவின் கலாசாரத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும். நிலையான லாபம், பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு நம்பகத்தன்மை ஆகியவற்றை விமான நிறுவனத்தின் முக்கிய முன்னுரிமைகளாக அவர் குறிப்பிட்டார்.
அளவிடக்கூடிய வகையில் செலவைக் குறைக்கும் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் யோசனைகளை முன்வைக்கும் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை அறிமுகப்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







