ஏர் இந்தியா விமானி போதைப் பொருள் பயன்படுத்தியது பரிசோதனையில் உறுதியானது
தாய்லாந்திலிருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமானத்தில் விமானி போதைப்பொருள் பயன்படுத்தியது ஆய்வில் உறுதியானது குறித்து...

பிரதிப் படம்
தாய்லாந்திலிருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமானம் குலுங்கிய விவகாரத்தில் விமானி போதைப்பொருள் பயன்படுத்தியது ஆய்வில் உறுதியாகியுள்ளது.
தாய்லாந்தின் புகேட் நகரில் இருந்து கடந்த ஆக. 4 ஆம் தேதி 137 பயணிகள், 8 விமானப் பணிக்குழுவினருடன் தில்லிக்கு வந்த ஏர் இந்தியாவின் ஏர்பஸ் ஏ320 நியோ ரக விமானம் சுமார் 300 அடி உயரத்திலிருந்து திடீரென நடுவானில் காற்றோட்டத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக திடீரென குலுங்கி, அதன்பின்னர் தில்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 17 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் பூதகரமாக வெடித்த நிலையில், சம்பவத்திற்குப் பிறகு இரண்டு விமானிகளுக்கும் கட்டாய மனோவியல் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், விமானிகள் போதைப்பொருள் பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இதனையடுத்து, விமானிகளுக்கு போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான சோதனை நடத்தப்பட்ட நிலையில், தலைமை விமானி போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, அனைத்து விமானிகளுக்கும் ஏர் இந்தியா நிறுவனம் போதைப்பொருள் பரிசோதனை நடத்தியதில், முதற்கட்ட பரிசோதனையில் சந்தேகத்துக்கிடமான முடிவுகள் வந்தன.
இருப்பினும், உடல்நலக் குறைவால் உட்கொள்ளும் மருந்துகளாலும் இத்தகைய நிலை ஏற்படும் என்பதால், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தினரா என்பதை உறுதிப்படுத்த, சேகரிக்கப்பட்ட மாதிரிகள் விரிவான ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.
இந்த நிலையில், விமானி போதைப்பொருள் பயன்படுத்தியது ஆய்வில் உறுதி செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட விமானி மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு விமான விபத்து விசாரணை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
Summary
Air India terminates services of Phuket-Delhi flight's pilot-in-command who tested positive for drug use
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





