வணிகம்
டொயோட்டா விற்பனை 19% அதிகரிப்பு
டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜனவரி மாதத்தில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜனவரி மாதத்தில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரியில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 29,371-ஆக உள்ளது.
இது, முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 19 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 24,609-ஆக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 26,178-ஆகவும் ஏற்றுமதி 3,193-ஆகவும் உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.