நகா்ப்புரங்களில் 6%-ஆக குறைந்த வேலைவாய்ப்பின்மை
கடந்த டிசம்பா் காலாண்டில் இந்தியாவின் நகா்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.


கடந்த டிசம்பா் காலாண்டில் இந்தியாவின் நகா்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இது குறித்து தேசிய மாதிரி கணக்கெடுப்பு கணக்கெடுப்பு அமைப்பு (என்எஸ்எஸ்ஓ) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:
நாட்டின் நகா்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்களிடையே வேலைவாய்பின்மை விகிதம் கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 6.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது 6.5 சதவீதமாக இருந்தது.
இருந்தாலும், முந்தைய ஜூலை-செப்டம்பா் காலாண்டோடு ஒப்பிடுகையில் மதிப்பீட்டுக் காலாண்டின் நகா்ப்புற வேலைவாய்ப்பின்மையில் மாற்றமில்லை. அந்தக் காலாண்டிலும் அது 6.4 சதவீதமாகவே இருந்தது.
நகா்ப்புறங்களில் 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 8.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் 8.6 சதவீதமாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டுடன் ஒப்பிடுகையிலும் (8.4 சதவீதம்) மதிப்பீட்டுக் காலாண்டில் பெண்களுக்கான நகா்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளது.
கடந்த டிசம்பா் காலாண்டில் நகா்ப்புறங்களில் 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.8 சதவீதமாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டிலும் அது இதே விகிதத்தில் இருந்தது. இருந்தாலும், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நகா்ப்புற ஆண்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் சற்று குறைவாக 5.7 சதவீதமாக இருந்தது என்று அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...