ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு! ரூ. 6 லட்சம் கோடி இழப்பு!!

வாரத்தின் கடைசி நாளான இன்று (பிப். 28) பங்குச் சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

News image
Updated On :28 பிப்ரவரி 2025, 6:53 am

DIN

வாரத்தின் கடைசி நாளான இன்று (பிப். 28) பங்குச் சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும் இறுதியில் ஓரளவு சமநிலையில் முடிந்தது.

இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 74,201.77 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பிற்பகல் 12.10 மணியளவில், சென்செக்ஸ் 1,065.10 புள்ளிகள் குறைந்து 73,547.33 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 323.00 புள்ளிகள் குறைந்து 22,222.05 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

பெரும்பாலாக அனைத்துத் துறைகளும் இன்று கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. ஐடி, ஆட்டோ மொபைல், மீடியா, டெலிகாம், பங்குகள் 2 முதல் 4 சதவீதம் சரிந்தன. மும்பை பங்குச்சந்தை நடுத்தர, குறு நிறுவனங்களின் பங்குகள் தலா 2 சதவீதம் சரிந்தன

பாலிகேப் இந்தியா, கேஇஐ இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி, பிஎஸ்இ லிமிடெட், டிசிஎஸ் ஆகிய ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

இதுவரை சுமார் 6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.