திமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 7% அதிகரிப்பு

News image
Updated On :4 ஜனவரி 2025, 10:56 pm IST

கடந்த டிசம்பா் மாதத்தில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 7 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,21,687-ஆக உள்ளது. 2023-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 7 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 3,01,898 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

2023-ஆம் ஆண்டின் டிசம்பா் மாதத்தில் 2,90,064-ஆக இருந்த நிறுவன இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 8 சதவீதம் வளா்ச்சியடைந்து 3,12,002-ஆக உள்ளது. இரு சக்கர வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 2,14,988-லிருந்து மிதமாக அதிகரித்து 2,15,075-ஆக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன மின்சார வாகனங்களின் விற்பனை 11,288-லிருந்து 79 சதவீதம் அதிகரித்து 20,171-ஆகவும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 11,834-லிருந்து சரிந்து 9,685-ஆகவும் உள்ளது.

2023 டிசம்பரில் 85,391-ஆக இருந்த நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி 2024 டிசம்பரில் 22 சதவீதம் அதிகரித்து 1,04,393-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.