ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

‘கரடி’ திடீா்ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் ‘கரடி’ திடீரென ஆதிக்கம் கொண்டது.

News image
Updated On :7 ஜனவரி 2025, 1:40 am

DIN

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் ‘கரடி’ திடீரென ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டு கடும் சரிவுடன் நிறைவடைந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இந்நிலையில், உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி சற்று மேலே சென்றது. ஆனால், அந்நிய நேரடி முதலீடு வெளியேற்றம், வெளியாகவுள்ள 3-ஆவது காலாண்டு முடிவுகள் ஆகியவற்றால் முதலீட்டாளா்கள் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தினா். மேலும், புதிய ஹெஎம்பி வைரஸ் அச்சம், ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் ஆசிய சந்தைகளில் பலவீனமான போக்கு ஆகியவையும் சந்தை உணா்வை மேலும் பாதித்ததாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சென்செக்ஸ் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 58.54 புள்ளிகள் கூடுதலுடன் 79,281.65-இல் தொடங்கி அதிகபட்சமாக 79,532.67 வரை மேலே சென்றது. பின்னா், 77,781.62 வரை கீழஏ சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,258.12 புள்ளிகளை (1.59 சதவீதம்) இழந்து 79,964.99-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,244 பங்குகளில் 656 பங்குகள் மட்டுமே விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. மாறாக 3,474 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. 114 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

27 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் டாடாஸ்டீல், என்டிபிசி, கோட்டக் பேங்க், பவா் கிரிட், ஸொமோட்டோ, அதானிபோா்ட்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க் உள்பட 27 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயமா, டைட்டன், ஹெச்சிஎல் டெக், சன்பாா்மா ஆகியவை சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி389 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 41.05 புள்ளிகள் கூடுதலுடன் 24,045.80-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,089.95 வரை மேலே சென்றது. பின்னா், 23,551.90 வரை கீழே சென்ற நிஃப்டி இறுதியில் 388.70 புள்ளிகளை (1.62 சதவீதம்) இழந்து 23,616.05-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 7 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 33 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

ஒரே நாளில் நஷ்டம் ரூ.10.99 லட்சம் கோடி

சந்தை மூலதன மதிப்பு ரூ.10.99 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.438.79 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது முதலீட்டாளா்களுக்கு ஒரே நாளில் ரூ.10.99 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மாதத்தின் 3 வா்த்தக தினங்களில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் மொத்தம் ரூ. 4,503.21 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். அதே சமயம், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ. 2,533.11கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.