பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்! சென்செக்ஸ், நிஃப்டி 0.9% சரிவு!

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (ஜன. 13 )இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 705 புள்ளிகள் சரிவுடனனும் நிஃப்டி 23 ஆயிரத்து 300 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.

வெளிநாட்டு நிதி வெளியேற்றம் காரணமாக பங்குச் சந்தை சரிந்தது மட்டுமின்றி, கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து காணப்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் பலவீனமாக இருந்தது.

காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 542 புள்ளிகள் சரிந்து 76,818.34 புள்ளிகளாக வணிகம் இருந்தது. மொத்த வணிகத்தில் இது 0.74 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 208.45 புள்ளிகள் சரிந்து 23,230.90 புள்ளிகளாக இருந்தது. இது மொத்த வணிகத்தில் 0.86 சதவீதம் சரிவாகும்.

கடந்த வெள்ளிக்கிழமை 77,378.91 புள்ளிகள் சரிந்திருந்த சென்செக்ஸ், மேலும் 705 புள்ளிகள் சரிந்து 76,629.90 புள்ளிகளாகத் தொடங்கியது.

கடந்த வெள்ளிக்கிழமை 23,431.50 புள்ளிகளில் முடிந்த தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, இன்று 250 புள்ளிகள் சரிந்து 23,195.40 புள்ளிகளுடன் தொடங்கியது. இவை கிட்டத்தட்ட 0.9% சரிவாகும்.

இதேபோன்று நிஃப்டி பட்டியலில் உள்ள நடுத்தர மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 2% வரை சரிவுடன் இருந்தன. வணிகம் தொடங்கிய 5 நிமிடங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டது.

4 நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றம்

சென்செக்ஸ் பட்டியலில் ரூ. 425 கோடி லட்சம் கோடி வரை முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்தனர்.

சென்செக்ஸ் பட்டியலில் ஆக்சிஸ் வங்கி, இந்தஸ் இந்த் வங்கி, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் ஆகிய நான்கு நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் இருந்தன.

இதையும் படிக்க | ரயில்வேயின் காகித உறையில்கூட தமிழ் இல்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com