
இந்திய பங்குச் சந்தை வணிகம் தொடர்ந்து 2வது நாளாக இன்று (ஜன. 23) உயர்வுடன் முடிந்தது. சென்செக்ஸ் 115 புள்ளிகளும் நிஃப்டி 23,200 புள்ளிகளுக்கு மேலும் உயர்வுடன் இருந்தன.
துறை ரீதியாக ஐடி, மீடியா, ஆட்டோ துறை பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 115.39 புள்ளிகள் உயர்ந்து 76,520.38 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.15 சதவீதம் உயர்வாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 23,205.35 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.22 சதவீதம் உயர்வாகும்.
வணிக நேரத் தொடக்கத்தில் 76,414.52 புள்ளிகளுடன் தொடங்கிய சென்செக்ஸ் அதிகபட்சமாக 76,743.54 புள்ளிகள் வரை உயர்ந்தது. சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், அதிகபட்சமாக 76,202.12 புள்ளிகள் வரை சரிந்தது. வணிக நேர முடிவில் 115 புள்ளிகள் உயர்ந்து 76,520 புள்ளிகளாக நிறைவு பெற்றது.
15 நிறுவனப் பங்குகள் உயர்வு
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 தரப் பங்குகளில் 18 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 12 நிறுவனங்கள் சரிவுடன் இருந்தன.
அதிகபட்சமாக அல்ட்ராடெக் சிமென்ட் பங்குகள் 6.80% உயர்ந்திருந்தன. இதற்கு அடுத்தபடியாக சொமாட்டோ 2.55%, எம் & எம் 2.13%, சன் பார்மா 1.93%, டெக் மஹிந்திரா 1.75%, டாடா மோட்டார்ஸ் 1.32%, டைட்டன் கம்பெனி 1.26%, டாடா ஸ்டீல் 1.13% உயர்ந்திருந்தன.
இதேபோன்று கோட்டாக் வங்கி -1.19%, எச்சிஎல் டெக் -1.14%, பவர் கிரிட் -1.08%, ரிலையன்ஸ் -1.06%, எஸ்பிஐ -1.01%, எச்யுஎல் -0.91%, ஆக்சிஸ் வங்கி -0.87%, எல்&டி -0.43% சரிவுடன் இருந்தன.
நிஃப்டி நிலவரம்
நிஃப்டியைப் பொறுத்தவரை, வணிக நேரத் தொடக்கத்தில் 23,128.30 புள்ளிகளுடன் தொடங்கி, அதிகபட்சமாக 23,270.80 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் அதிகபட்சமாக 23,090.65 புள்ளிகள் வரை சரிந்தது.
நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் கோ டிஜிட், கோஃபோர்க், ஸென்சார் டெக், ஆம்பர் என்டர்பிரைசஸ், சொனாட்டா சாஃப்வேர், பாரத் டைனமிக்ஸ், பிடிலைட் உள்ளிட்டவை ஆதயப் பட்டியலில் இருந்தன.
வர்த்மான் டெக்ஸ்டைல்ஸ், ராமகிருஷ்ண ஃபோர்க், ஐநாக்ஸ் விண்ட், அலெம்பிக் பார்மா, பிஎன்பி ஹவுசிங் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவுடன் காணப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.