சனிக்கிழமை செயல்படவிருக்கும் பங்குச் சந்தை
பட்ஜெட் அன்று மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தை வழக்கம் போல் செயல்படவுள்ளன.

Updated On :25 ஜனவரி 2025, 10:30 pm

வரும் பிப். 1-ஆம் தேதி சனிக்கிழமை என்றாலும், நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யவிருப்பதால் அன்று மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் வழக்கம் போல் செயல்படவுள்ளன.
இது குறித்து தேசிய பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் சனிக்கிழமை வழக்கமான நேரத்தில் பங்குச் சந்தைகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் வெளியிடப்படும் அறிவிப்புகள் முதலீட்டாளா்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மிகவும் பரபரப்பான அந்த நாளில் இரு பங்குச் சந்தைகளும் செயல்படுகின்றன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...