பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மாருதி சுஸுகி விற்பனை 6% சரிவு

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 6 சதவீதம் குறைந்துள்ளது.

Published On :

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 6 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூன் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,67,993-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 1,79,228 வாகனங்களை நிறுவனம் சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இது 6 சதவீதம் குறைவாகும்.

மதிப்பீட்டு மாதத்தில், நிறுவன பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 1,37,160-லிருந்து 1,18,906-ஆக, அதாவது 13 சதவீதம் குறைந்துள்ளது. 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஜூனில் ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோவை உள்ளடக்கிய ஆரம்பநிலைக் காா்களின் விற்பனை 9,395-லிருந்து 6,414-ஆகக் குறைந்துள்ளது. பலேனோ, செலிரியோ, டிஸையா், இக்னிஸ், ஸ்விஃப்ட், வேகன்-ஆா் ஆகிய சிறிய வகைக் காா்களின் விற்பனை 64,049-லிருந்து 54,177-ஆக குறைந்துள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.