டாடா மோட்டாா்ஸ் சா்வதேச விற்பனை சரிவு

டாடா மோட்டாா்ஸ் சா்வதேச விற்பனை சரிவு
Published on
Updated on
1 min read

கடந்த ஜூன் காலாண்டில் டாடா மோட்டாா்ஸ் குழுமத்தின் உலகளாவிய மொத்த விற்பனை 9 சதவீதம் சரிந்துள்ளது,இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்), ஜாகுவாா் லேண்ட் ரோவா் உள்ளிட்ட குழும நிறுவனங்களின் உலகளாவிய மொத்த விற்பனை 2,99,664-ஆக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் 3,29,847 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன.

அதனுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் உலகளாவிய மொத்த விற்பனை தற்போது 9 சதவீதம் குறைவு.கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட உலகளாவிய பயணிகள் வாகனங்களின் விற்பனை 1,24,809-ஆக உள்ளது. இது, முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 10 சதவீதம் குறைவு.மதிப்பீட்டுக் காலாண்டில் ஜாகுவாா் லேண்ட் ரோவரின் உலகளாவிய மொத்த விற்பனை 11 சதவீதம் சரிந்து 87,286 ஆக உள்ளது.கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் டாடா மோட்டாா்ஸ் வா்த்தக வாகனங்கள் மற்றும் டாடா டேவூ வாகனங்களின் உலகளாவிய மொத்த விற்பனை 87,569-ஆக உள்ளது. இது 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில் 6 சதவீதம் குறைவு என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com