தேஜஸ் நெட்வொர்க்ஸ் முதல் காலாண்டு இழப்பு ரூ.194 கோடி!

உள்நாட்டு தொலைத்தொடர்பு சாதன உற்பத்தியாளரான தேஜஸ் நெட்வொர்க்ஸ், ஜூன் 2025ல் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.193.87 கோடி ஒருங்கிணைந்த நஷ்டத்தை பதிவு செய்துள்ளது.
Tejas Networks
Tejas Networks
Published on
Updated on
1 min read

புதுதில்லி: உள்நாட்டு தொலைத்தொடர்பு சாதனங்கள் உற்பத்தியாளரான தேஜஸ் நெட்வொர்க்ஸ், ஜூன் 2025ல் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.193.87 கோடி ஒருங்கிணைந்த நஷ்டத்தை பதிவு செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் விற்பனை சரிவு என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல்-க்கு 4ஜி கியர்களை வழங்கிய நிறுவனம், ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.77.48 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது.

தேஜஸ் நெட்வொர்க்ஸின் ஒருங்கிணைந்த வருவாய், ஜூன் 2024 காலாண்டில் ரூ.1,563 கோடியாக இருந்ததாக அறிவிக்கப்பட்ட காலாண்டில் சுமார் 87 சதவிகிதம் சரிந்து ரூ.202 கோடியாக உள்ளது.

பாரத்நெட் - 3 மற்றும் ஆப்டிகல் உபகரணங்களுக்கான எங்கள் ரூட்டர்களுக்கான ஆர்டர்களை இந்தியாவில் உள்ள தனியார் ஆபரேட்டர்களிடமிருந்து பெற்றோம்.

பி.எஸ்.என்.எல். விரிவாக்க ஆர்டர் உள்ளிட்ட சில கொள்முதல் ஆர்டர்களைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால், வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டதாக தேஜஸ் நெட்வொர்க்ஸ் தலைமை இயக்க அதிகாரியான அர்னோப் ராய் தெரிவித்தார்.

அதே வேளையில் வருவாய் குறைவு காரணமாக ரூ.194 கோடி நிகர இழப்பு ஏற்பட்டதாக தேஜஸ் நெட்வொர்க்கின் தலைமை நிதி அதிகாரி சுமித் திங்ரா தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 4வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

Summary

Domestic telecom gear maker Tejas Networks posted a consolidated loss of Rs 193.87 crore in the first quarter ended June 2025.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com