
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
புதன்கிழமை தங்கம் விலை ரூ.80 உயா்ந்து ஒரு சவரன் ரூ.72,720-க்கும் விற்பனையானது. அடுத்து வியாழக்கிழமையும் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதாவது கிராமுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.9,130-க்கும், சவரனுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.73,040-க்கும் விற்பனையானது.
வெள்ளிக்கிழமையான இன்று விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் அதாவது ஜூன் 1ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.71,360 ஆக இருந்த நிலையில் ஆறு நாள்களில் படிப்படியாக ரூ.1680 வரை உயர்ந்து, ரூ.73,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல, வாரத் தொடக்கத்தில் ரூ.8,920 ஆக இருந்த ஒரு கிராம் தங்கம், படிப்படியாக ரூ.210 அதிகரித்து இன்று ரூ.9130க்கு விற்பனையாகி வருகிறது.
இந்த வாரம் முழுக்க தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று உயராமல் நேற்று விற்பனையான அதே விலையில் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.114 -க்கு விற்பனையான நிலையில், இன்றும் அதே விலை நீடிக்கிறது. அதன்படி, கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,14,000-க்கு விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.