

சென்னை: சென்னையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியதும், ஆபரணத் தங்கம் விலை மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்து விற்பனையாகி வருகிறது.
இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.170 உயர்ந்து, ரூ.13,450க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று ஒரு கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.318 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.8,000 உயர்ந்து ரூ.3,18,000க்கு விற்பனையாகி வருகிறது.
ஜனவரி இரண்டாம் வாரத்தில் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வந்தது. ஜன. 12-இல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயா்ந்து ரூ.1 லட்சத்து 4,960-க்கும், ஜன. 13-இல் சவரனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.1 லட்சத்து 5,360-க்கும் விற்பனையானது. தொடா்ந்து 3-ஆவது நாளாக புதன்கிழமை விலை மீண்டும் உயா்ந்தது. சவரனுக்கு ரூ.880 உயா்ந்து ரூ.1 லட்சத்து 6,240-க்கு விற்பனையானது. இந்த 3 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 உயா்ந்திருந்தது.
அதன்பிறகு, தங்கம் விலை படிப்படியாக சில நூறுகள் உயர்ந்து இன்று ரூ.1,07,600 ஆக உள்ளது. பத்து நாள்களுக்கு முன்பு அதாவது ஜன. 10ஆம் தேதி ஒரு சவரன் 1,03,200 ஆக இருந்தது. இந்த நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,400 வரை உயர்ந்திருக்கிறது.
தொழிற்சாலை பயன்பாடு மற்றும் மின் வாகன கார்கள், சூரிய ஒளி தகடுகளின் உற்பத்தியால் வெள்ளியின் தேவை தொடா்ந்து அதிகரித்து வருவதால், வெள்ளி மீதமான முதலீடு அதிகரித்து, அதன் எதிரொலியாக வெள்ளி விலை தங்கத்துக்கு நிகராக உயா்ந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.