ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

விவோ ஒய் 400 5ஜி இந்தியாவில் அறிமுகமாவது எப்போது? சிறப்புகள் என்னென்ன?

விவோ நிறுவனத்தின் புகழ் பெற்ற ஒய் வரிசையில் மீண்டும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.

Vivo Y400 Pro 5G

விவோ ஒய் 400 5ஜி - படம் / நன்றி - விவோ

Published On :

விவோ நிறுவனத்தில் புதிதாக ஒய் 400 5ஜி என்ற ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இந்தியாவில் அறிமுகமாகும் தேதியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விவோ நிறுவனத்தின் புகழ் பெற்ற ஒய் வரிசையில் மீண்டும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு இந்திய சந்தையில் அதிகரித்துள்ளது. அதோடுமட்டுமின்றி, முந்தைய ஸ்மார்ட்போன்களில் இருந்து வேறுபடும் வகையில் எண்ணற்ற செய்யறிவு அம்சங்களைக் கொண்டதாக அறிமுகமாகிறது விவோ ஒய் 400 5ஜி.

விவோ ஒய் 400 5ஜி ஸ்மார்ட்போன், ஜூன் 20ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளதாக விவோ அறிவித்துள்ளது.

வெண்மை மற்றும் வெள்ளி நிறத்தில் வரவுள்ள இந்த ஒய் 400 5ஜி, முந்தைய ஸ்மார்ட்போன்களை விட சற்று அளவில் பெரியது. முன்பக்கம் இரு கேமராக்களுடன் எல்.இ.டி. விளக்கும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்புகள் என்னென்ன?

வளைந்த 3D திரையுடன் மிகவும் மெலிதான வடிவமைப்பு விவோ ஒய் 400 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மெலிதான வடிவமுடைய ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாக இடம்பெறும்.

திரையின் வெளிச்சம் 4500nits அளவுக்கு இருக்கும். பயன்படுத்துவதற்கு சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 7300 புராசஸர் உடையது. 256GB நினைவகவும் 8GB உள்நினைவகமும் கொண்டது.

ஏஐ டிரான்ஸ்கிரிப்ட், ஏஐ சூப்பர்லிங்க், ஏஐ நோட் அசிஸ்டென்ட், ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன் உள்ளிட்ட செய்யறிவு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் இதன் அறிமுக விலை ரூ. 25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நினைவக திறனின் அளவைப் பொறுத்து விலை மாறுபடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.