27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

விவோ டி 4 அல்ட்ரா இந்தியாவில் அறிமுகம்: இன்றுமுதல் விற்பனை தொடக்கம்!

விவோ டி 4 அல்ட்ரா என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்திய மின்னணு சந்தையில் இன்று (ஜூன் 18) அறிமுகமாகியுள்ளது.

News image

விவோ டி 4 அல்ட்ரா - படம் / நன்றி - விவோ

Updated On :18 ஜூன் 2025, 6:04 pm IST

விவோ டி 4 அல்ட்ரா என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்திய மின்னணு சந்தையில் இன்று (ஜூன் 18) அறிமுகமாகியுள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்துடன் அதிக திறன் கொண்ட ஆண்டிராய்டு ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் டி 4 அல்ட்ராவை வாங்கலாம் என விவோ உத்திரவாதம் அளித்துள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.

அந்தவகையில் இன்று (ஜூன் 18) நண்பகல் 12 மணிமுதல் விவோ டி 4 அல்ட்ரா என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

256GB நினைவகம், 8GB உள் நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 37,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

256GB நினைவகம் 12GB உள் நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 39,999 என்றும், 512GB நினைவகம் 12GB உள்நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 41,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவோ டி 4 சிறப்பம்சங்கள்

  • விவோ டி 4 ஸ்மார்ட்போனில் 6.67 அங்குல அமோலிட் திரை வழங்கப்பட்டுள்ளது.

  • தொடுதிரையைப் பயன்படுத்துவதற்கு சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz திறனும், பிரகாசமாய் இருப்பதற்கு 5,000 nits திறனும் கொடுக்கப்பட்டுள்ளது.

  • ஆண்டிராய்டு 15 ஃபன்டச் புராசஸருடன் செய்யறிவு தொழில்நுட்பக் கருவிகளும் உள்ளிணைக்கப்பட்டுள்ளன.

  • பின் பக்கம் மூன்று கேமராக்கள். இதில் 50 MP ஐ.எம்.எக்ஸ். 921 என்ற சோனி சென்சார், 50 MP ஐ.எம்.எக்ஸ். 882 சென்சார் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் மூன்று மடங்கு அதிகமாக ஜூம் செய்தாலும் படங்களின் துல்லியத்தன்மை சிதையாது.

  • முன்பக்கத்தில் செல்ஃபி பிரியர்களுக்காக 32MP அல்ட்ரா எச்.டி. கேமரா வழங்கப்பட்டுள்ளது.

  • 5,500mAh பேட்டரி திறனுடன் வேகமாக சார்ஜ் செய்யும் வகையில் 90W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • தங்க நிறத்திலும் இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.