பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

News image

கோப்புப்படம் - -

Updated On :26 ஜூன் 2025, 4:52 am

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

போர்ப்பதற்றம் மற்றும் மத்திய கிழக்கில் இருந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.73,880-க்கும் விற்பனையானது.

அதைத்தொடா்ந்து, ஈரான் - இஸ்ரேல் இடையே போர்ப் பதற்றம் தணிந்துள்ள நிலையில், திங்கள்கிழமைமுதல் தொடர்ந்து மூன்று நாள்களில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1,320 குறைந்தது. புதன்கிழமை நிலவரப்படி ஒரு சவரன் ரூ. 72,560-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.9,070-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ரூ. 120-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.