தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (நவ. 7)
சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு கண்டிருப்பது பற்றி...
தங்கம் விலை - கோப்புப்படம்
தங்கம் விலை மீண்டும் கணிசமான உயர்வைக் கண்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி சென்னையில் இன்று(நவ.7) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,160க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,770க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள போதிலும், வெள்ளியின் விலை நேற்றைய நிலையிலேயே மாற்றம் ஏதுமின்றித் தொடர்கிறது. இதைத்தொடர்ந்து வெள்ளி விலை கிராம் ஒன்று ரூ.205க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் உள்நாட்டுத் தேவையின் அடிப்படையில் சென்னை வர்த்தகச் சந்தையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் மீண்டும் அதிகரித்துள்ளது.
நேற்று தங்கம் விலை கணிசமாகக் குறைந்து நிம்மதியளித்த சூழலில், இன்று மீண்டும் உயர்வைக் கண்டிருப்பது நகை பிரியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Gold prices have registered a significant increase once again, causing shock and concern among the public.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


